பகிரப்படும் சைக்கிள் களை உரிய இடங்களில் நிறுத்த வலி யுறுத்தும் புதிய வழிமுறையுடன் சைக்கிள் பகிர்வுத் திட்டத்தை வழங்கும் சிங்கப்பூர் நிறுவனமான 'எஸ்ஜி பைக்' நேற்று தனது சேவையைத் தொடங்கியது. 'ஜியோஸ்டேஷன்' என்ற கரு வியை இச்சேவை பயன்படுத்துகி றது. இது அருகில் நிறுத்தப் பட்டுள்ள 'எஸ்ஜி' சைக்கிள்களை 5 மீட்டர் முதல் 25 மீட்டர் தூரம் வரையில் ரேடியோ கதிர் மூலம் அடையாளம் காணும். சைக்கிள் நிறுத்துமிடங்கள் மஞ்சள் நிற சதுரங்களாகக் குறியி டப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நிறுத்துமிடங்களுக்கு வெளியே சைக்கிள் நிறுத்தப்பட்டால் அது அலார ஒலி எழுப்பும். உடனே சைக்கிளை உரிய இடத்தில் நிறுத்துமாறும் இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பயனீட் டாளரின் செய லிக்குத் தெரிவிக்கும். அபராதம் எவ்வளவு என இன் னமும் முடிவு செய்யப்படவில்லை.
பெண்டிங் ரோட், புளோக் 124ல் நேற்று நடைபெற்ற 'எஸ்ஜி' சைக்கிள் பகிர்வுத் திட்ட தொடக்கவிழாவில், போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானுக்கு சைக்கிளைப் பூட்டும் முறையை விளக்குகிறார் வட மேற்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டாக்டர் டியோ ஹோ பின். இருவரும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

