ஆயுதத்தைக் கண்டறியும் ஆறு ரேடார் சாதனங்க ளைத் தற்காப்பு அமைச்சு வாங்கியுள்ளது. தற்காப்பு, பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் தயாரித்துள்ள இந்த ரேடார் சாதனங்கள் (படம்) எந்தத் திசையிலிருந்து எறிபடை அல்லது சிறு பீரங்கிகள் பாய்ச்சப்படுகின்றன என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் ஆற்றல் பெற்றவை என்றும் சிங்கப்பூர் பீரங்கிப் படையின் தாக்குதல் திட்டங் களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. "சிங்கப்பூர் ராணுவப்படையின் நவீனமயமாக்கல் திட்டத் தொடர் நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்தப் புதிய ரேடார் சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயிற்சிகள் மேம்படுத்தப்படும்," என்றார் தற்காப்பு அமைச்சின் தலைமை அமைப்புமுறை ஒருங்கிணைப்பு அதிகாரி கர்னல் லிம் வெய் லியான்.
தற்காப்பு அமைச்சு வாங்கும் ஆயுதம் கண்டறியும் ரேடார் சாதனங்கள்
1 mins read
-

