வழக்கறிஞர் ரவிக்கு $20,000 பிணை அனுமதி

1 mins read

எம் ரவி என்று குறிப்பிடப்படும் வழக்கறிஞர் ரவி மாடசாமிக்கு நேற்று நீதிமன்றம் $20,000 பிணை அனுமதித்தது. அவர் மனநலக் கழகத்தில் கவனிக்கப் படுவதற்காக விசாரணைக் காவ லில் வைக்கப்பட்டிருந்தார். வழக்கறிஞர் ரவி ஃபேஸ்புக் கில், இதர சமூக ஊடகத்தில் எந்தத் தகவலையும் பதிவேற்றக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு பிணை அனு மதிக்கப்பட்டு இருப்பதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித் தது. வழக்கறிஞர் ரவி தானும் சரி வேறு ஒருவர் மூலமாகவும் அல் லது எந்த வழியிலும் சரி யாரையும் திட்டவோ, கோபத்தை ஏற்படுத் தவோ, அவமதிக்கவோ, அலைக் கழிக்கவோ, தொல்லை கொடுக் கவோ கூடாது. இந்த நிபந்தனைகளைத் தான் ஏற்றுக்கொண்டிருப்பதாக வழக் கறிஞர் ரவி தெரிவித்து இருக் கிறார். வழக்கறிஞர் தொழில் நடத்த சான்றிதழ் வழங்கும்படி விண்ணப்பிக்க சென்ற அக்டோ பர் முதல் ரவிக்கு இரண்டாண்டு காலம் தடைவிதிக்கப்பட்டு இருக் கிறது.