சிங்கப்பூர்=-இந்தோனீசிய கடற்படைகளின் கண்ணிவெடி அகற்றும் பயிற்சி நிறைவு

சிங்கப்பூர்=-இந்தோனீசிய கடற்படைகளின் கண்ணிவெடி அகற்றும் பயிற்சி நிறைவு

1 mins read

சிங்கப்பூர்- இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளின் கடற்படைகள் இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில் நடத்திய இருதரப்பு கண்ணிவெடி அகற்றும் பயிற்சி யை நேற்று முடித்துக்கொண்டன. அந்தப் பயிற்சி இம்மாதம் 22 முதல் 26ஆம் தேதி வரை நடந் தது. இந்தத் தொடரில் அது 17வது பயிற்சி. சிங்கப்பூர் குடியரசு கடற்படை, இந்தோனீசிய கடற்படை ஆகிய இரண்டையும் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றனர். கடற்கரை ஓரத்தில் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். பாவனைப் பயிற்சியும் இடம்பெற்றது. சிங்கப் பூர் நீரிணைக்குள் வருவதற்கான கிழக்கு நுழைவாயிலில் அனைத் துலக கப்பல்கள் எந்த ஆபத்து மின்றி சென்று வருவதை இரு நாட்டுக் கடற்படைகளும் உறுதிப் படுத்தின. அந்தக் கடற்பகுதியில் கண்ணி வெடிகள் எதுவும் இல்லை என்பதை அவை திட்ட வட்டமாக உறுதிப்படுத்தின.

பிந்தான் தீவின் கிழக்கு கடற் கரை அருகே மிரட்டல்கள் ஏற்படு வதைப்போன்று சோடிக்கப்பட்டு அதைச் சமாளிக்கும் வகையில் பயிற்சிகள் நடைபெற்றன. உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தியும் பயிற்சிகள் நடந் தன. கண்ணிவெடியைக் கூட்டாக அகற்றும் பயிற்சியிலும் வீரர்கள் ஈடுபட்டனர். இரு நாட்டுக் கடற்படைகளும் காலக்கிரம முறைப்படி நிபுணத்துவ பரஸ்பர பரிமாற்றங்களில் ஈடுபடு கின்றன. பயிற்சியிலும் பரஸ்பர வருகை யிலும் இரு நாட்டு கடற்படைகளும் பங்கெடுத்துக்கொள்கின்றன. சமூக, குடிமைச் செயல்திட் டங்களிலும் இவை ஒத்துழைக் கின்றன. சிங்கப்பூர் - இந்தோனீசியா அரசதந்திர உறவு ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன.