நிபுணர்கள், தொழில்நுட்பருக்கு நகர மையத்தில் சமூக மன்றம்

நிபுணர்கள், தொழில்நுட்பருக்கு நகர மையத்தில் சமூக மன்றம்

1 mins read

சிங்கப்பூரில் பல்வேறு நாட்டங் களை உடைய குறிப்பிட்ட மக்க ளுக்குச் சேவையாற்றும் வகையில் மக்கள் கழகம் தன்னுடைய மன் றங்களில் வசதிகளை விரிவுபடுத் தவிருக்கிறது. பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் நேற்று இதனை அறிவித்தார். தெலுக் ஆயர் ஹோங் லிம் கிரீன் சமூக மன்றத்தில் நடந்த நிலம் அகழும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். இந்தச் சமூக மன்றம், மக்கள் கழகம் அமைக்கும் இரண்டாவது சிறப்பு சமூக மன்றமாக இருக்கும். முன்பு சமூக நிலையங்கள் சிங்கப்பூரின் எல்லா பகுதிகளிலும் உள்ள சமூகங்களில் அமைக்கப் பட்டன.

இப்பொழுது காலம் மாறுகிறது. பல சிங்கப்பூரர்களும் பற்பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் கள். இதனால் இத்தகைய மன் றங்களுக்கு பூகோள எல்லைகள் மாறுகின்றன என்று மக்கள் கழக துணைத் தலைவருமான திரு சான் விளக்கினார். ஆகையினால் மக்கள் கழகம், சமூக மன்றங்களில் இடம்பெறக் கூடிய செயல்திட்டங்களைப் பன் முகப்படுத்துகிறது என்றார் அவர். மக்களின் நிலையில் புதிய பரிணாமங்கள் ஏற்படும் பொழுது முன்மாதிரிகள் மாறுகின் றன என்றார் அவர். இந்தத் தேவைகளை நிறைவேற்றும் வகை யில் புதிய சமூக மன்றங்கள் அமைகின்றன. இதற்கு ஹோங் லிம் ஓர் எடுத்துக்காட்டு.