குண்டு இருப்பதாக போலி மிரட்டல் விடுத்தவர் கைது

குண்டு இருப்பதாக போலி மிரட்டல் விடுத்தவர் கைது

1 mins read

குண்டு இருப்பதாக பொய் மிரட்டல் விடுத்ததற்காக 60 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் கைது செய்து இருக்கிறது. அந்த ஆடவரை அதற்கு முன்பாக சனிக் கிழமையன்று சிங்கப்பூர் உள் விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு காவலர்கள் தடுத்து வைத்தனர். சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கைச் சேர்ந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவர் 2017 ஆகஸ்ட் 26ஆம் தேதி இரவு சுமார் 7.32 மணிக்கு போலிசுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். தான் ஒருவரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் தன்னிடம் குண்டு இருப்பதாக அந்த நபர் கூறியதாகவும் அந்தப் பாதுகாப்பு ஊழியர் போலிசிடம் சொன்னார். பாதுகாப்பு ஊழியர் அந்த ஆடவரை தடுத்து வைத்தபோது உள்விளையாட்டு அரங்கில் ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. தொலைபேசி வந்ததையடுத்து பிடோக் போலிஸ் பிரிவு அதி காரிகள் அந்த விளையாட்டு அரங்கிற்கு விரைந்து ஆடவரை கைதுசெய்தனர்.

கைதான சந்தேகப்பேர்வழியிடம் மிரட்டல் எதையும் நிறைவேற்றும் எண்ணமோ அதற்கான வழியோ இல்லை என்பது பூர்வாங்க புலன் விசாரணை மூலம் தெரியவந்ததாக போலிஸ் அறிக்கையில் கூறியது. பாதுகாப்பு தொடர்பான மிரட் டல் எதையும் போலிஸ் கடுமையான ஒன்றாக கருதுகிறது. இப்படி புரளிகளை கிளப்பிவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலிஸ் தயங்காது.