ப. பாலசுப்பிரமணியம்
பொழுதுபோக்காக நீச்சலடிக்கும் பழக்கமுள்ள செம்பவாங் குடியிருப் பாளர் திரு நா.பழனியப்பன் சிறிது காலம் அதைக் கைவிட்டிருந்தார். பின்னர் தன் மகள் ஆர்த்தி நாச்சி யம்மை ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நீச்சல் குளத்தில் இறங்கினார். சிறு வயதிலிருந்து தன் மகளை நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபத்தினால் அவர் பெரியவர் ஆனாதும் இயல்பாக ஆரோக்கிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப் பார் என்ற நோக்கத்துடன் வாரத் தில் ஒரு முறையாவது யீஷுன் நீச்சல் குளத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார்.
"எந்த விளையாட்டு நடவடிக் கையிலும் ஒட்டுமொத்த குடும் பத்தையும் ஈடுபடுத்தும்போது அது ஆரோக்கிய வாழ்க்கைமுறை யைக் கடைப்பிடிக்க வழிவகுக்கும். நீரிழிவு நோய் மட்டும் அல்ல, மற்ற நோய்கள் வரும் சாத்தியத்தையும் அது குறைக்கும்," என்று கூறினார் 39 வயது பொறியாளர் திரு பழனியப்பன். நீச்சல் விளையாட்டில் ஈடுபடுவ தன் மூலம், குடும்ப பந்தம் வலு வடைவதோடு, தன் 10 வயது மகள் புதிய நண்பர்களையும் சந்திக்க வாய்ப்பளிப்பதாக அவர் குறிப்பிட்டார். அதோடு அவரது மகளின் உடல் ஆரோக்கியமும் மேம்பட்டு உள்ளது என்றார் அவர்.
வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் நேற்று ஏற்பாடு செய்திருந்த 'சுவிம்சேஃபர்' தினத்தை அதிகாரபூர்வமாக தொடங்கிவைத்த இயூ டீ அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் அலெக்ஸ் யாம் ஸிமிங் (இடது). படம்: வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம்

