ஒருவருக்கு மேல் போட்டியிடத் தகுதி பெற்றால் சிங்கப்பூரின் எட்டாவது அதிபர் தேர்தல் செப் டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுபவர் சிங்கப்பூர் வரலாற்றில் இரண்டா வது மலாய் சமூக அதிபராகத் திகழ்வார். மேலும் அந்த சமூகத் துக்காக அதிபர் பதவி ஒதுக்கப் பட்ட பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மலாய் அதிபராகவும் அவர் இருப்பார். வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 13ஆம் தேதி நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. போட்டி இருக்குமா என்பதும் சிங்கப்பூரர்கள் வாக்களிக்க வேண் டிய அவசியம் ஏற்படுமா என்பதும் அன்றைய தினம் தெரிந்துவிடும்.
அதிபர் பொறுப்புக்குப் போட்டி யிட முன்வரும் அனைவரின் தகுதிகளையும் அதிபர் தேர்தல் குழு பரிசீலிக்கும். அதன் முடிவை மனுத் தாக்கல் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது செப் டம்பர் 12ஆம் தேதிக்குள் அவர் களுக்குத் தெரிவிக்கும். தேர்தலில் போட்டியிட ஒருவர் மட்டுமே தகுதிபெறும் பட்சத்தில் மனுத் தாக்கல் தினத்தன்று அவர் அதிபராக அறிவிக்கப்படுவார். இந்த விவரங்களை தேர்தல் துறை நேற்று ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது. தேர்தல் நடத்துவதற் கான ஆணையை பிரதமர் லீ சியன் லூங் பிறப்பித்துள்ளதாக அது குறிப்பிட்டது.

