சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்த இந்தோனீ சியரை சிங்கப்பூர் போலிசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். சனிக்கிழமை அன்று சிங்கப் பூரை நோக்கிச்செல்லும் கடற் பாலத்தில் அமைந்துள்ள தண் ணீர்க் குழாய்களுக்கு இடையே அவர் நடந்து சென்றுகொண் டிருந்தபோது சிங்கப்பூர் கடலோரக் காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே இது குறித்து உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் உள்ள அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்தின் அதிகாரிகளும் கடலோரக் காவல் துறை அதிகாரிகளும் நடந்துவந்து கொண்டிருந்த சந்தேக நபரைத் தேடினர். அப்போது தண்ணீர்க் குழாய் களுக்கு அடியில் மிதவை உதவி யுடன் அவர் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் இந்தோனீ சியர் என்பது விசாரணையில் தெரிந்தது. அவரிடமிருந்து உருளை வடி விலான மிதவையையும் அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். சந்தேக நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிங்கப்பூருக்குள் அனுமதியின்றி நுழைவதும் வெளி யேறுவதும் கடுமையாகக் கருதப் படும் என்று கூறிய ஆணையம், இத்தகையோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர். (இரவில் எடுக்கப்பட்ட படம்). படம்: குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம்

