சென்ற ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் இணையக் காதல் மோசடிகளும் மின்னஞ்சல் ஆள்மாறாட்ட மோசடிகளும் 25 விழுக்காட்டுக்கு மேலாக அதிகரித்துள்ளன. இவ்வாண்டு ஜனவரி மாதத் திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில் 349 இணையக் காதல் மோசடிகளில் மொத்தமாகச் சுமார் $22.1 மில்லியன் இழக்கப்பட்டது. சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் 277 மோசடிகளில் $11.2 மில்லியன் பறிபோனது. இதுபோன்ற காதல் மோசடிகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் "பெரும் அக்கறைக் குரிய குற்றமாக" இருப்பதாகவும் காவல்துறையினர் நேற்று குறிப் பிட்டனர். சிங்கப்பூரின் அரையாண்டு குற்றச்செயல் புள்ளிவிவரங்களைக் காவல்துறையினர் நேற்று வெளி யிட்டனர்.
சென்ற ஆண்டு இணையக் காதல் மோசடிகள் வெகுவாக அதிகரித்து 636 ஆக இருந்தது. 2015ல் 385 சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. இவ்வாண்டின் முதல் பாதியில், தனியொரு சம்பவத்தில் பறிபோன ஆகப்பெரிய தொகைக் கிட்டத் தட்ட $6 மில்லியன். மின்னஞ்சல் ஆள்மாறாட்ட மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இவ்வாண்டின் முதல் பாதியில் 160 சம்பவங்கள் புகார் செய்யப்பட்டன. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 124 மோசடிகள் நடந்தன. மின்னஞ்சல் ஆள்மாறாட்ட மோசடிகளில் இழக்கப்பட்ட தொகை சென்ற ஆண்டின் முதல் பாதியின் $17.4 மில்லியனில் இருந்து இவ்வாண்டு அதே காலகட்டத்தில் $21.9 மில்லியனாக அதிகரித்தது. இவ்வாண்டின் முதல் பாதியில், தனியொரு சம்பவத்தில் பறிபோன ஆகப்பெரிய தொகைக் கிட்டத் தட்ட $4 மில்லியன்.

