ஆய்வுக் கழகங்களுக்கு சில சம யங்களில் அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அதனை சுயசார்பற்ற நோக்கத்துடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் வெளிநாட்டு அரசாங்கத்தின் செல்வாக்கின்கீழ் செய்யக்கூடாது என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் நேற்றுக் காலை கூறினார். ஆய்வுக் கழகங்கள் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட் டார். அரசாங்க ஊழியர்களால் இயலாதவற்றை அவற்றால் சொல் லவும் ஆராயவும் முடியும். லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியின் ஒரு பகுதி யான ஆசிய போட்டித்திறன் கழ கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு சண்முகம் பேசினார். வெளிநாட்டு அரசாங்கத்திற் காக சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கையிலும் பொதுக் கண் ணோட்டத்திலும் தலையிட முயன் றதற்காகக் கல்வியாளர் ஒருவரின் நிரந்தரவாசத் தகுதி அண்மையில் ரத்து செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு திரு சண்முகம் இவ்வாறு பேசினார். திரு சண்முகம் எந்தவொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டிப் பேசாத போதிலும், கல்வியாளர்கள் 'கைக்கூலிக்கு வசமாகி', 'சுயசார் பற்ற நோக்கம், கல்வித்துறை சுதந்திரம் ஆகியவற்றின் போர்வை யின்கீழ்' சிங்கப்பூரின் அரசியலில் செல்வாக்கைப் பயன்படுத்தும் உள்நோக்கத்துடன் வெளிநாட்டின் கருத்துகளைப் பரப்புவது "ஏற்புடை யதல்ல," என்று கூறினார்.
வெளிநாட்டுச் செல்வாக்கின் கருவியாகிவிடக் கூடாது - அமைச்சர் கா.சண்முகம்
1 mins read
-

