மின்னணுப் பணப்பட்டுவாடா முறைக்கு பொது குறியீட்டை உருவாக்க சிறப்புப் பணிக்குழு

மின்னணுப் பணப்பட்டுவாடா முறைக்கு பொது குறியீட்டை உருவாக்க சிறப்புப் பணிக்குழு

1 mins read

சிங்கப்பூர் முழுவதும் மின்னணுப் பணப்பட்டுவாடா முறைக்குப் பயன்படுத்தக்கூடிய பொதுவான கியூஆர் கோடு (QR code) குறியீட்டை உருவாக்குவதற்கான ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக் கப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூரில் மின்னணுப் பணப் பட்டுவாடா முறையை முற்றிலும் நடைமுறைக்குக் கொண்டு வரு வதற்கான வழிகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டு உள்ள ஒரு புதிய மன்றம் அந்தச் சிறப்புக் குழுவை அமைத்திருக் கிறது. சிங்கப்பூர் நாணய ஆணை யம் நேற்று இந்த அறிவிப்பை விடுத்தது. புதிய சிறப்புப் பணிக்குழுவுக்கு 'SGQR சிறப்புப் பணிக்குழு' என பெயர். இதற்கு இந்த ஆணையமும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு தலைமை தாங்கும். இந்த ஆண்டு முடிவில் தரப் படுத்தப்பட்ட SGQR வரை முறைகளை உருவாக்கலாம் என்று இந்தக் குழுவின் நோக்கம். சிங்கப்பூரில் ரொக்கப் புழக்கத் தைக் குறைத்து மின்னணுப் பணப்பட்டுவாடா முறையைப் பொதுவானதாக்க முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.