கண்ணியத்துடன் அதிபர் தேர்தல்

கண்ணியத்துடன் அதிபர் தேர்தல்

1 mins read

அடுத்த மாதம் நடக்கவிருக்கின்ற அதிபர் தேர்தலில் பிரசார விதிமுறைகள் மாற்றம் காண்கின் றன என்று தேர்தல் ஆணையம் நேற்று கூறியது. அதிபர் பதவி யின் கண்ணியத்தை கட்டிக்காக் கும் நோக்கத்தில் அத்தகைய மாற்றங்கள் அமல்படுத்தப் படுகின்றன. முக்கிய அறிவிப்புகளில், அரசியல் சாசனப்படி, அதிபரின் பொறுப்புகளை அறிந்திருப்பதாக தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர்கள் பிரமான வாக்குமூல பத்திரத்தை சமர்ப்பிக்கவேண்டும். தொலைக்காட்சியில் இரண்டு கருத்தரங்குகள் நடத்தப்படும். பிரசார பேரணிகள் ஊக்குவிக் கப்படாது. முதல் கருத்தரங்கு செப்டம்பர் 16ஆம் தேதியும் இரண்டாவது கருத்தரங்கு செப்டம்பர் 19ஆம் தேதியும் நடைபெறும். இரண்டுமே 90 நிமிடங்களுக்கு ஆங்கிலத்தில் நடைபெறும். முதல் கருத்தரங்கை ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸும் இரண் டாவது கருத்தரங்கை மீடியாகார்ப் பும் நடத்துகின்றன. இரண்டு கருத்தரங்குகளும் தொலைக்காட்சி, வானொலி, இணையத்தில் ஒளிபரப்பப்படும். ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நடத்தும் முதல் கருத்தரங்கில் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் வானொலி தயாரிப்பாளர் திரு ஆர்னல்ட் கே வேட்பாளர்களை பேட்டி காண்பார்.