அதிபர் தேர்தல்: நன்மை செய்வோம்; சேர்ந்து செய்வோம்: ஹலிமா யாக்கோப் வாக்குறுதி

அதிபர் தேர்தல்: நன்மை செய்வோம்; சேர்ந்து செய்வோம்: ஹலிமா யாக்கோப் வாக்குறுதி

2 mins read

அதிபர் என்பவர் நாட்டை ஒன்றுபடுத்தவேண்டும். அத்துடன், நம்மிடையே உள்ள பொதுவான பண்புகளை ஒன்று திரட்டி முழுமனதுடன் சிங்கப்பூருக் காகவும் சிங்கப்பூரர்களுக்காகவும் சேவை புரிய வேண்டும் என்று திருவாட்டி ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார். நேற்று என்டியுசி மையத்தில் நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத் தில், "நன்மை செய்வோம்; சேர்ந்து செய்வோம்" எனும் பிரசார முழக்க வரியை திருவாட்டி ஹலிமா அறிவித்தார். தேசத்தை ஒற்றுமைப் படுத்துவது அதிபரின் முக்கிய கடமைகளில் ஒன்று என்பதால் இந்த முழக்க வரியை தாம் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறி னார். அனைவரையும் அரவணைத்து முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்லும் சிறப்பான சமூகமாக சிங்கப்பூரை உருவாக்கும் முயற்சி யில் அவரோடு இணைந்து செயல் பட பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார். பல இன சமூகம், தகுதிக்கு முன்னுரிமை, சமூகப் பிணைப்பு ஆகிய கொள்கைகளை பல ஆண்டுகளாக தான் ஆதரித்து வருவதாகவும் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இந்தக் கொள்கைகளை தொடர்ந் து வலியுறுத்த விரும்புவதாகவும் திருவாட்டி ஹலிமா கூறினார்.

இளம் பருவத்தில் அவர் பட்ட கஷ்டங்களும் தான் கடந்து வந்த பாதையும், முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முற் போக்கான சமுதாயம் தம்மை கவர்ந்ததாக அவர் கூறினார். அதுவே அனைவருக்கும் வாய்ப்பு களை வழங்கும் என்றும் அவர் கூறினார். அவரது வாழ்க்கை பயணம் சிங்கப்பூரர்கள் பலரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவும் எதுவுமின்றி துவங்கினாலும் ஏதோ ஒன்றை உருவாக்கியுள்ளோம் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் தேர்தல் நடத்துவதற் கான ஆணையை வெளியிட்டதை யடுத்து திருவாட்டி ஹலிமாவின் செய்தியாளர் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திருவாட்டி ஹலிமா யாக்கோப் தனது அதிபர் தேர்தல் பிரசார முழக்க வரியையும் பிரசார குழு உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்