கூட்டுரிமை வீட்டு பாதுகாப்புக் காவலராக பணியாற்றும் 45 வயது ஆடவர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைதானார். அவர் தான் ஆங் சூன் தோங் என்ற குண்டர் கும்பலைச் சேர்ந்த வர் என்று ஒரு காணொளியில் கூறினார். சட்டவிரோத கும்பலின் உறுப் பினராக இருந்த குற்றத்திற்காக அந்தப் பாதுகாப்பு காவலர் கைதா கியிருப்பதாக போலிஸ் தெரி வித்து உள்ளது. 'சிங்கப்பூர் அன்சென்சட் ஃபேஸ்புக்' எனும் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டது. பாதுகாப்புக் காவலர் என்று பின்புறத்தில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற டி-சட்டையுடன் காணப்பட்ட அந்த ஆடவர், ஒரு பாதுகாப்புக் காவலர் இடத்திலிருந்து தொலை பேசியில் பேசியதை அந்தக் காணொளி காட்டியது.
'முடிந்தால் பொங்கோலில் வந்து என்னை சந்தியுங்கள்' என்று அந்த ஆடவர் தமிழிலும் ஹோக் கியன் மொழியிலும் பேசி யது காதில் விழுந்தது. அந்தக் காணொளி 130,000 தடவை பார்க்கப்பட்டு இருக்கிறது. ஆங் சூன் தோங் என்ற ரகசிய குண்டர் கும்பல் மலேசியா விலும் சிங்கப்பூரிலும் செயல்படு வதாகக் கூறப்படுகிறது.

