கடன்முதலை அலைக்கழிப்பு; சம்பவ இடத்தில் சிறுவன்

கடன்முதலை அலைக்கழிப்பு; சம்பவ இடத்தில் சிறுவன்

1 mins read
4e26a6c2-ef59-48a5-a22d-5f6ef1c07878
-

கடன்முதலை அலைக்கழிப்பு விவகாரம் தொடர்பில் அரசு நீதிமன்றத்தில் சென்ற சனிக்கிழமை குற்றம் சுமத்தப்பட்ட 16 வயது சிறுவனை நேற்று போலிஸ் ரெட்ஹில் ரோட்டிற்கு கொண்டு சென்றது. அங்கு அந்தப் பையன் வீவக வீடு ஒன்றின் கதவை தீ வைத்து கொளுத்திவிட்டான் என்று கூறப்படுகிறது. ஜோவன் பே டிங் ஹுய் என்ற அந்தப் பையன் ரெட்ஹில், பாய லோபார், பிடோக் ஆகிய இடங்களில் இருக்கும் மூன்று வீடுகளின் வாயில் கதவுகளுக்குத் தீ மூட்டியிருக்கிறான் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அந்தப் பையன் கடன்முதலைக்காக பலரையும் அலைக்கழித்திருக்கிறான் என்றும் வீடுகளில் சாயத்தைப் பூசி வீட்டுக் கதவைப் பூட்டி பல பிரச்சினைகளைக் கொடுத்திருக்கிறான் என்றும் கூறப்படுகிறது. பையனுக்கு எதிரான புகார்கள் ஆகஸ்ட் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் போலிசிடம் தெரிவிக்கப்பட்டன. இத்தகைய குற்றச்செயல் களில் ஈடுபடுவோருக்குச் சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவை தண்டனைகளாக விதிக்கப்படலாம்.

கடன்முதலை அலைக்கழிப்பு விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஜோவன் பே டிங் ஹுய். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்