காலாங்-பாய லேபார் விரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு டாக்சி தீப்பிடித்துக் கொண்டது. தீயை அணைக்க நண்பர்கள் இரண்டு பேர் உதவி னார்கள். சாலைகளைப் பயன் படுத்துவோரின் பாதுகாப்பைத் தான் மிக முக்கியமாகக் கருதி தாங்கள் உதவியில் இறங்கியதாக அவர்கள் கூறினார்கள். முகம்மது ஃபாத் அப்துல் அஜிஸ், 36, சையது அப்துல்லா அல்ஃகாப்ஷி, 37, ஆகிய அந்த இரண்டு பேரையும் சமூக ஊட கத்தில் பலரும் கதாநாயகர் களாகப் போற்றி புகழ்கிறார்கள். "டாக்சியில் தீ மூண்டதைப் பார்த்ததும் உடனே உதவிக்கு விரைந்தோம். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே எங்களின் மிக முக்கிய நோக்கமாக இருந்தது," என்று முகம்மது ஃபாத் சொன்னார். அந்த நேரத்தில் திரு ஃபாத் தான் வேலை செய்யும் நிறுவனத் தின் மருத்துவ வாகன வண்டியை ஓட்டி வந்தார். அதை நடுத்தடத் தில் நிறுத்தி போக்குவரத்து வாகனங்களை எச்சரித்தார். பிறகு அவர் தீயை அணைக்க உதவினார். கூர்காக்களும் வேறொரு மோட்டார்சைக்கி ளோட்டியும் அவர்களுக்கு உதவி னார்கள். தீ விபத்து நிகழ்ந்து 45 நிமிடங்கள் கழித்து இரவு சுமார் 7.30 மணிக்குத் தான்அந்த இடத்தை விட்டு அவர்கள் இருவரும் அகன்றார்கள்.
முகம்மது ஃபாத் அப்துல் அஜிஸ், (கையைத் தூக்கிக்கொண்டு இருப்பவர்) சையது அப்துல்லா அல்ஃகாப்ஷி, இருவரும் பொது உதவி மனப்பான்மையுடன் டாக்சி தீயை அணைக்கிறார்கள். படம்: ஃபேஸ்புக்

