உலகின் ஆகப் பெரிய பாலர்பள்ளி சிங்கப்பூரில் நேற்று அதிகாரபூர் வமாகத் திறக்கப்பட்டது. அந்தப் பள்ளியில் 2,100 பிள்ளைகளுக்கு இடம் இருக்கிறது. லோரோங் சுவானில் உள்ள ஆஸ்திரேலிய அனைத்துலக பள்ளி வளாகத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள 'பாலர் கல்விக் கிராமம்' என்ற அந்தப் பள்ளி ஆஸ்திரேலிய அனைத்துலக பள் ளிக்கும் ஸ்டாம்ஃபர்ட் அமெ ரிக்கன் அனைத்துலக பள்ளிக்கும் இடையிலான ஓர் ஒத்துழைப்புத் திட்டமாகும். அந்தப் பள்ளி வளாகம் 50,000 சதுர அடி பரப்பளவைக் கொண் டது. அங்கு ஐந்து கட்டடங்கள் இருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் உள்ளன. 18 மாதம் முதல் ஆறு வயது வரைப்பட்ட பிள்ளைகளுக்காக கட்டப்பட்டுள்ள உலகின் ஆகப் பெரிய பாலர்பள்ளி இதுதான் என்று இந்த இரண்டு அனைத்துலகப் பள்ளிகளும் தெரி வித்து இருக்கின்றன.
2,100 பிள்ளைகளுக்கு இடம்; மாபெரும் பாலர் பள்ளி திறப்பு
1 mins read
-

