மலேசியாவின் 60வது சுதந்திர தினத்தையொட்டி சிங்கப்பூர் தலைவர்கள் மலேசிய தலைவர்க ளுக்குப் வாழ்த்துக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதிபர் டோனி டான் கெங் யாம், பிரதமர் லீ சியன் லூங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ் ணன் ஆகியோர் கடந்த 60 ஆண்டுகளில் மலேசியா கண்டு வந்துள்ள குறிப்பிடத்தக்க முன் னேற்றங்களையும் மேம்பாடுகளை யும் அணுக்க உறவையும் பாராட்டி இருக்கிறார்கள். மலேசியாவின் பேரரசருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உங்க ளின் விவேகமான ஆலோசனை, இலக்கு ஆகியவற்றின்கீழ் மலே சியா தொடர்ந்து அமைதியையும் செழிப்பையும் நல்லிணக்கத்தையும் அனுபவித்து வரும் என்று உறுதி யாக நம்புகிறேன் என சிங்கப்பூர் அதிபர் தெரிவித்து இருக்கிறார். சிங்கப்பூர்-மலேசியா இரு நாடுகளும் தங்கள் மக்களுக்கிடை யில் பிரிக்க முடியாத அளவுக்கு ஆழ்ந்த நட்புறவைக் கொண்டிருப் பதை தன்னுடைய கடிதத்தில் சுட் டிக்காட்டியிருக்கும் அதிபர் டான், இரு நாடுகளும் சேர்ந்து செழித்து வந்திருப்பதைக் குறிப்பிட்டார். பிரதமர் லீ, தனது கடிதத்தில் மலேசியாவின் வலுவான, துடிப்பு மிக்க பொருளியலைப் பாராட்டி இருக்கிறார். மலேசியா இந்த வட்டாரத் திலும் அனைத்துலக சமூகத் திலும் செல்வாக்குமிக்க, தீவிர மான பங்காற்றி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசிய தலைவர்களுக்கு சிங்கப்பூர் தலைவர்களின் வாழ்த்துகள்
1 mins read

