தமிழ் முரசு நாளிதழின் நோக்கம் நிறைவேறியது

தமிழ் முரசு நாளிதழின் நோக்கம் நிறைவேறியது

1 mins read
da0ccd06-635f-475b-b724-90c8c1d811b2
-

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் 2005ஆம் ஆண்டில் தமிழ் முரசின் தலைவர் பொறுப்பை திரு சந்திரதாஸ் ஏற்றிருந்தாலும், இந்த நாளிதழின் வளர்ச்சியில் அவரது பங்கு 1995ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. தமிழ் முரசு விளம்பர ரீதியிலும் பத்திரிகை தொழில் ரீதியிலும் நலிந்திருந்த 1995ஆம் ஆண்டில் அதன் அப்போதைய ஆசிரியரான காலஞ்சென்ற திரு வை. திரு நாவுக்கரசு, இதற்கு உடனடி நட வடிக்கை எடுக்க வில்லை என் றால் நாளிதழை முடிவுக்குக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து திரு சந்திரதாஸை அணுகினார். இதன் தொடர்பில் தான், முன் னைய மூத்த அமைச்சர் பேரா சிரியர் எஸ். ஜயகுமாரையும் முன் னைய அமைச்சர் திரு எஸ். தன பாலனையும் சந்தித்துப் பேசிய தாகக் கூறினார் திரு தாஸ். சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளி தழான தமிழ் முரசைக் காப்பாற் றியே ஆக வேண்டும் என்றும் அதை இக்கட்டிலிருந்து காப்பாற்ற ஒரே வழி அதை எஸ்பிஎச் நிறுவ னம் வாங்கிக் கொள்வதுதான் என்பதையும் உணர்ந்த திரு தாஸ், அதன் தொடர்பில் அப்போ தைய எஸ்பிஎச்-இன் தலைவர் திரு லிம் கிம் சானுடன் தானும் திரு தனபாலனும் வழக்கமாக விளையாடும் கோல்ஃப் ஆட்டத் தின்போது இதுபற்றிப் பேசினர். (விவரம்: epaper.tamilmurasu.com.sg)

12 ஆண்டுகளாக தமிழ் முரசின் தலைவராக செயலாற்றிய திரு எஸ். சந்திரதாஸ்.