ஆய்வு: முதியோரிடையே ஊட்டச்சத்து குறைவு

ஆய்வு: முதியோரிடையே ஊட்டச்சத்து குறைவு

1 mins read

ஆசிய நாட்டிலுள்ள முதியோரி- டையே ஊட்டச்சத்து குறைவு பிரச் சினை பற்றி ஆராய சிங்கப்பூரில் புதிய நிலையம் ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. முதியவர்களிடம் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. ஆனால், இதுகுறித்த தரவுகள் மேற்கத்திய ஆய்வுகள் சார்ந்த- வையாகவே உள்ளன. எனவே, 'முதியோருக்கான ஊட்டச்சத்து ஆரோக்கிய ஆய்வு நிலையம்' என்ற இந்த நிலையம் ஆசியாவில் உள்ள முதியோர்கள் எதிர்கொள்ளும் ஊட்டச்சத்துப் பிரச்சினைகளை ஆராய உள்ளது. வீடுகளில் வசிக்கும் முதியோர்களின் பிரச்சினைகள் குறித்து மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வு, ஆசியாவிலேயே மிகப் பெரிய அளவிலான ஊட்டச்சத்துக் குறைவு பற்றிய ஆய்வாக இருக் கும் என்று நிலையம் குறிப்பிட்டது.

வீட்டிலேயே தங்கியிருந்து மருத்துவமனைகளில் அனுமதிக் கப்படும் முதியவர்களில் மூன்றில் ஒரு பங்கினரிடம் ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என்று சாங்கி பொது மருத்துவமனையின் துணைப் பேராசிரியர் சாமுவெல் சியூ கூறினார். ஆய்வுக்காக 65 வயதுக்கு மேற்பட்ட 1,200 பேர் நேற்று சேர்க்- கப்பட்டனர். இதில் 600 பேரை சாங்கி பொது மருத்துவமனை தேர்வு செய்யும். மற்றவர்களை சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் ஆய்வில் ஈடுபடுத்தும். புதிய நிலையம் சாங்கி பொது மருத்துவமனை, அனைத்துலக சுகாதார பராமரிப்பு நிறுவனமான அபோட் (Abbott) ஆகியவற்றுடன் இணைந்து பொருளியல் மேம் பாட்டு மன்றத்தின் ஆதரவில் செயல்படும்.