'அன்பான சிங்கம்': புதிய வகை பெற்றோர்

'அன்பான சிங்கம்': புதிய வகை பெற்றோர்

1 mins read

பிள்ளைகளின் சாதனைகளிலும் செயல்பாட்டிலும் அதிகளவு கவனம் செலுத்தும் பெற்றோரை 'அன்பான சிங்கம்' என்று சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகம் பெயர் சூட்டியுள்ளது. 'டைகர் மம்' என்ற பதத்- திலிருந்த இந்தச் சொல்லை ஆய்வுக் கழகத்தினர் உருவாக்கி யுள்ள னர். தொடக்கப்பள்ளி குறித்த பெற்றோரின் மனப்போக்கு பற்றிய ஆய்வின் முடிவுகள் குறித்து பகிர்ந்துகொண்ட ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளரான மேத்யு மேத்யூஸ், "அன்பான சிங்கம்" பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எல்லாமே வேண்டும் என நினைக்கிறார்கள் என்றார். கொள்கை ஆய்வுக் கழகத் தின் ஏற் பாட்டில் நேற்று நடந்த "பெற்றோர்களும் பள்ளிப்- படிப்பும்" என்ற கருத் தரங்கில் அவர் உரையாற்றினார்.

"ஏட்டுக் கல்வி மட்டும் போதாது, தங்கள் பிள்ளை- களுக்கு மற்றத் திறன்களும் போட்டித்தன்மையும் வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்," என்று கூறினார். "பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி- யான சூழலைத் தர விரும் பு கிறார்கள். அதேநேரத்தில் சிறந்த மதிப்பெண்களையும் எதிர்பார்க்கிறார்கள்," என்றார் டாக்டர் மேத்யூஸ். இந்த எதிர்பார்ப்புகளால் பெற்றோர் அதிகளவு மன உளைச் சலுக்கு உள்ளாகின்ற னர். பிறகு தங்களது மன உளைச்சலை தங்களது பிள்ளைகளின் மேல் திணிக் கிறார்கள் என்ற அவர், அவர்கள் பிள்ளைகள் மேல் அக்கறை கொண்டிருப்பதால் 'அன்பான' என்ற வார்த்தை யைப் பயன்படுத்துவதாக சொன்னார். ஆய்வில் பங்கேற்றவர்களில் 30 விழுக்காட்டினர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.