ஆளில்லாத லாரி ஒன்று சாலையில் சறுக்கி, அரபு ஸ்திரீட்டில் உள்ள மூகு ஃபோர்க் உணவகத்தில் மோதியது. லாரியை நிறுத்த முயன்ற ஓட்டுநர் காயமடைந்தார். புதன்கிழமை மாலை 5 மணி அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஓட்டுநர் பிரேக்கை போட மறந்துவிட்டதாக வான்பாவ் நாளிதழ் செய்தி குறிப்பிட்டது. காயமடைந்த 65 வயது ஓட்டுநர் டான் டொக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். உணவகத்தின் மேசைகள், நாற்காலிகளில் மோதுவதற்கு முன்னதாக ஒரு கார் மீதும் லாரி மோதியதாக அறியப்படுகிறது.
உணவகத்துக்குள் புகுந்த லாரி
1 mins read

