உலகின் சிறந்த ஐந்து விலங்கியல் தோட்டங்களில் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் இடம்பிடித்துள்ளது. பயண இணையத் தளமான டிரிப்அட்வைசரின் 2107ஆம் ஆண்டுக்கான பயணிகளில் தேர்வு விருதில் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் முதல் 10 இடங்களில் வந்துள்ள ஒரே ஆசிய வெற்றியாளரும் இதுதான். முதல் இடத்தில் ஸ்பெயினின் லோரோ பார்க், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவில் சான் டியேகோ விலங்கியல் தோட்டம், மூன்றாவது இடத்தில் பிரிட்டனின் செஸ்டர் விலங்கியல் தோட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
உலகின் சிறந்த ஐந்து விலங்கியல் தோட்டங்களில் சிங்கப்பூர்
1 mins read

