தீபாவளியை முன்னிட்டு ஹேஸ்டிங்ஸ் ரோட்டில் தீபாவளி விழாக்காலக் கிராமம் இடம்பெறவிருப்பதால் அந்தச் சாலை அடுத்த 7 வாரங்களுக்குப் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று போலிஸ் அறிக்கை தெரிவித்தது. இம்மாதம் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை சாலை மூடப்பட்டிருக்கும். இந்தக் காலத்தின்போது, போலிஸ் மற்றும் அவசரகால வாகனங்கள் மட்டுமே இச்சாலையைப் பயன்படுத்த முடியும். வாகனமோட்டிகளுக்கு வழிகாட்ட, துணை போலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் பணியில் இருப்பார்கள். தீபாவளிச் சந்தை இம்மாதம் 11ஆம் தேதி தொடங்கி தீபாவளிக்கு முந்திய நாள் அக்டோபர் 17ஆம் தேதி வரை நீடிக்கும். சந்தை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.
தீபாவளிக் கிராமம்: ஹேஸ்டிங்ஸ் ரோடு 7 வாரங்களுக்கு மூடல்
1 mins read
-

