முஹம்மது ஃபைரோஸ்
இவ்வாண்டு ஹஜ்ஜுக்குச் சென் றுள்ள சிங்கப்பூர் யாத்ரிகர்கள் அணியை வழிநடத்துகிறார் திரு ஃபரிஹுல்லாஹ் அப்துல் வஹாப் சஃபியுல்லாஹ், 50. சிங்கப்பூர் யாத்ரிகர்கள் விவ கார அலுவலகத்தின் தலைவர் பொறுப்பை சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) இவருக்கு இவ்வாண்டு வழங்கியுள்ளது. கடைசியாக 2012ல் ஹஜ் ஜுக்கு சென்ற திரு ஃபரிஹுல் லாஹ், சவூதி அரேபியாவில் உள் கட்டமைப்பு, தளவாட அம்சங் களைப் பார்க்கும்போது ஐந்து ஆண்டுகளில் அவற்றில் குறிப் பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண முடிவதாகக் குறிப்பிட்டார். "கூடுதலான யாத்ரிகர்களுக்கு வசதியை ஏற்படுத்தித்தரும் நோக்கில் பள்ளிவாசல்களில் தொழுவதற்கான இடவசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முறையும் மேம்படுத்தப்பட்டுள் ளது," என்றார் இவர். தற்போது மெக்காவில் வானிலை அதிக வெப்பமாக உள்ளதால் யாத்ரிகர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயம் உள்ளது. அங்கு சராசரி தட்பவெப்பநிலை 40 டிகிரி செல் சியஸுக்கும் மேலாக உள்ளது. "எனவே கூடுதலாக தண்ணீர் அருந்தும்படி யாத்ரிகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்," என்ற இவர், "கூட்ட நெரிசல் உச்சத்தில் உள்ள நேரங்களை தவிர்க்கும்படியும் கட்டுமானத் தளங்களைவிட்டு விலகி இருக் கும்படியும் அறிவுறுத்தியுள் ளோம்," என்றார்.
மெக்காவில் திரு ஃபரிஹுல் லாஹ், அவரது துணைவியார் ஷஹினா சுர்ஹையா. படம்: ஃபரிஹுல்லாஹ்

