இன்று முதல் இவ்வாண்டு இறுதி வரை பிளாஸ்டிக் பைகள், போத்தல் கள், கலன்கள் போன்றவற்றின் பயன்பாட்டை நிறுத்த ஊக்குவிக் கும் சிறுசிறு சன்மானங்களை 14 சில்லறை விற்பனைக் கடைகள் வழங்குகின்றன. பேரங்காடிகள் முதல் டோவரில் அமைந்துள்ள 'ஜெர்மன் சாசேஜ்' கடை வரை இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. சொந்தமாகப் பை, போத்தல் அல்லது கலன் எடுத்துச்செல்லும் வாடிக்கையாளர்கள், என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் $10 அல்லது அதைவிட அதிகமாகச் செலவு செய்யும்போது 10 காசு அல்லது 'உட்ஸ்டெல்ஸ்டாண்ட்' ஜெர்மன் சாசேஜ் கடையில் 50 காசு விலைக்கழிவு பெறுவார்கள். திட்டத்தில் பங்குபெறும் மற்ற உணவுக் கடைகளும் 50 காசு முதல் $1 வரையிலான விலைக் கழிவுகளை வழங்குகின்றன.
"ஸீரோ வேஸ்ட் எஸ்ஜி" (பொருள் விரயம் இல்லாத சிங்கை) எனும் அரசாங்கச் சார்பற்ற சுற்றுப் புற அமைப்பு நேற்று தொடங்கிய "சொந்தப் பை எடுத்துச்செல்க" இயக்கத்தின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் பிளாஸ்டிக் விரயத் தைக் குறைக்க கடைக்காரர்கள் இம்முயற்சியில் இறங்கியுள்ளனர். சென்ற ஆண்டு உற்பத்தியான 822,200 டன் பிளாஸ்டிக் குப்பை யில் வெறும் 7 விழுக்காடு மட் டுமே மறுபயனீடு செய்யப்பட்டது. சிங்கப்பூரின் குப்பை எரியூட்டு ஆலைகளில் வீசப்பட்ட ஆக அதிகமான வகை குப்பையில் பிளாஸ்டிக் குப்பையும் ஒன்று. பிளாஸ்டிக்கை எரிக்கும்போது கரியமில வாயு உற்பத்தியாகும். இந்த வாயு பூமியின் சூடேற்றத் தைத் தூண்டுகிறது.
சிங்கப்பூர் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக சில்லறை விற்பனையாளர் கள் 'உங்கள் சொந்தப் பையை எடுத்துச் செல்க' எனும் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். படம்: என்டியுசி ஃபேர்பிரைஸ்

