நாடளாவிய முறையில் ஆகஸ்ட் 29, 30, 31ஆம் தேதிகளில் போலிஸ் அதிகாரிகள் எடுத்த சோதனைகளில் மொத்தம் 114 பேர் கைதுசெய்யப்பட்டு இருக் கிறார்கள். அவர்களில் 57 பேர் ஆண்கள், 57 பேர் பெண்கள். வயது 15 முதல் 82 வரை. இந்தச் சந்தேகப்பேர்வழிகள் $1.5 மில்லியனுக்கும் அதிக தொகை சம்பந்தப்பட்ட 294 தில்லுமுல்லு விவகாரங்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏமாற்றியதாகக் கூறும் குற்றச் சாட்டின் பேரில் அவர்கள் விசாரிக் கப்பட்டு வருகிறார்கள். அதோடு கள்ளப்பணம் தொடர்பிலும் அவர் களிடம் விசாரணை நடந்து வரு கிறது என்று போலிஸ் கூறியது. முதலில் இவர்கள் இணையத் தில் கவர்ச்சிகரமான ஹோட்டல் அறைகள் இருப்பதாக விளம்பரப் படுத்தி வைப்புத்தொகை அல்லது முழுதொகையைச் செலுத்தும்படி கேட்பார்கள். பணம் செலுத்தப் பட்டதும் இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
இவர்கள் ஒருவரிடம் $2,300 பணத்தை ஏமாற்றி உள்ளனர். இணையக் கொள்முதல் தில்லு முல்லு விவகாரங்கள் தொடர்பில் போலிசிடம் ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. அண்மையில் 29 வயது ஆடவர் ஒருவருக்கு 12 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட் டதை போலிஸ் அறிக்கையில் சுட் டிக்காட்டியது. இத்தகைய தில்லுமுல்லு பேர்வழிகளுக்கு எதிராக போலிஸ் கடுமையான நடவடிக்கை எடுத்து வரும். இத்தகைய சட்டவிரோத பேர்வழிகளிடம் சிக்காமல் எச்சரிக்கையாக நடந்துகொள்ளும் படி போலிஸ் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. இணையத்தில் பல தில்லு முல்லுகளை அரங்கேற்றி இவர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றிவிடு வார்கள் என்று அது எச்சரித்தது.

