ஃபாரிட் கான்: நாட்டுக்கு நல்லவர் யாரோ அவரை அதிபராகத் தேர்ந்தெடுங்கள்

ஃபாரிட் கான்: நாட்டுக்கு நல்லவர் யாரோ அவரை அதிபராகத் தேர்ந்தெடுங்கள்

1 mins read
45e905bc-e934-4e02-8488-f994ef16035c
-

சிங்கப்பூரில் இந்த மாதம் நடக்க விருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் மூவரில் ஒருவரான ஃபாரிட் கான், வாக்காளர்கள் சிங்கப்பூருக்கான தலை சிறந்த நன்மைகளைக் கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவோரில் தலைசிறந்தவரை அதாவது நாட்டிற்கு நல்லவரை, நாட்டிற்குச் சேவையாற்றக் கூடிய வரைத் தேர்ந்தெடுக்கும்படி அவர் சிங்கப்பூரர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். போர்போன் ஆஃப்ஷோர் ஆசியா பசிபிக் என்ற வட்டார கடல்துறைச் சேவை நிறுவனத்தின் தலைவரான திரு ஃபாரிட் கான், நேற்று உட்லண்ட்சில் இருக்கும் அன்-நூர் பள்ளிவாசலில் ஹஜ் பெருநாள் தொழுகைக்குப் பிறகு செய்தியாளரிடம் பேசினார். இம்மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் மலாய் வேட்பாளர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடக்கிறது. அதில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மூன்று வேட்பாளர்கள் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அன்-நூர் பள்ளிவாசலில் திரு ஃபாரிட் கான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்