மூட்டு வலி: நிதி திரட்ட நீச்சல்

மூட்டு வலி: நிதி திரட்ட நீச்சல்

1 mins read
6e369bf2-2cd5-4ea8-ba33-996eef0c06c6
-

சிங்கப்பூர் பொது மருத்துவமனை யின் மூட்டுவலி ஆய்வு நிதித் திரட்டு நீச்சல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் 100 பேர் கலந்து கொண்டனர். மூட்டுவலி பற்றிய புரிந்துணர்வை அதிகரிப்பதும் மூட்டுவலி ஆய்வுக் காக நிதித் திரட்டுவதும் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் $102,000 திரட்டப்பட்டது. நிகழ்ச்சி யில் முன்னாள் நீச்சல் வீரர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிதி, சிங்கப்பூரில் மூட்டு வலி நோய்க்கான காரணங்கள், அதற்கான சிகிச்சை பற்றிய ஆய்வு களுக்குப் பயன்படுத்தப்படும். சிங்கப்பூரில் 600,00-0க்கும் அதிக மக்கள் மூட்டுகள் தேய் மானம் போன்ற பல வகை மூட்டு வலி நோய்களால் பாதிக்கப்படு கிறார்கள் என்று தெரிகிறது.

தேசிய நீச்சல் வீராங்கனை ரோன்னி ஹோ நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கோப்புப்படம்