குறைகூறல்: சிங்கப்பூரிடம் புகார் செய்ய மலேசியா விருப்பம்

குறைகூறல்: சிங்கப்பூரிடம் புகார் செய்ய மலேசியா விருப்பம்

1 mins read

ஜோகூர் பாருவில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றைத் தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட குறைகூறல்கள் தொடர்பில் சிங்கப்பூரிடம் புகார் செய்ய மலேசியா விரும்புகிறது. ஜோகூர் பாருவில் சென்ற மாதம் சாலை விபத்து ஒன்றில் சிக்கிய ஒருவர் தெரிவித்த மிகக் கடுமையான குறைகூறல்கள் தொடர்பில் சிங்கப்பூரிடம் முறையாக தான் புகார் செய்யப்போவதாக மலேசியாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மலேசியாவின் சுகாதார முறைக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட அந்தக் குறைகூறல்கள் காரண மாக மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்த மலேசிய சுகாதார அமைச்சர் எஸ் சுப்பிரமணியன், இதன் தொடர்பிலான உத்தேச சட்ட நடவடிக்கைகள் பற்றி தன் அமைச்சு அதன் வழக்கறிஞர்களு டன் பேசும் என்றும் குறிப்பிட்டதாக மலேசியாவின் பெரித்தா ஹரியான் நேற்று தெரிவித்தது.