சிங்கப்பூரில் நினைவாற்றல் மறதி நோய் காரணமாக பாதிக்கப்படும் முதியோர் பராமரிப்பில் உதவுவதில் சென்ற டிசம்பர் முதல் 170 பேருக்கும் அதிக முதியோர் பராமரிப்புப் பெண்மணிகள் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 2020ஆம் ஆண்டு வாக்கில் இத்தகைய பெண்மணி களின் எண்ணிக்கை 160ஆக இருக்கவேண்டும் என்பது இலக்கு. ஆனால் அந்த இலக்கு இப்போதே எட்டப்பட்டுவிட்டது. இந்தப் பெண்மணிகள் இத் தகைய முதியோரைப் பராமரிக்கும் தொண்டர்களுக்குக் கொஞ்சம் ஓய்வுகொடுப்பார்கள். சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் நேற்று இந்த விவரங்களைத் தெரி வித்தார். சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சருமான அவர், கேர்கிவ்வர்ஸ் அலையன்ஸ் லிமிட் டெட் என்ற நிறுவனத்தின் சுகா தாரப் பராமரிப்பாளர்கள் மாநாட்டில் நேற்று உரையாற்றினார்.
ஏமி கோர்: பராமரிப்பாளருக்கு கைகொடுக்கும் 170 பேர்
1 mins read

