அடுக்குமாடியில் தண்ணீர் இல்லை: பொதுப் பயனீட்டுக் கழகம் உதவிக்கரம்

அடுக்குமாடியில் தண்ணீர் இல்லை: பொதுப் பயனீட்டுக் கழகம் உதவிக்கரம்

1 mins read
f0c20c77-a95e-42b9-8d2e-0f5bedc731da
-

புக்கிட் பாஞ்சாங்கில் இருக்கும் கூட்டுரிமை புளோக் ஒன்றில் உள்ள 600க்கும் அதிக குடும் பங்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது.- உடனடியாக பொதுப் பய னீட்டுக் கழகம் தண்ணீர் வாகனங் களை அங்கு அனுப்பியது. வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணிக்குத் தண்ணீர்க் குழாயில் தண்ணீர் வராமல் போய்விட்டது என்று பெட்டீர் ரோட்டில் இருக்கும் மேஸ்பிரிங்ஸ் என்ற அந்த கண்டோமினியத்தில் இரண்டரை ஆண்டுகளாக வசித்து வரும் லியானல் என்பவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். பாதுகாப்புக் காவலரிடம் பேசிய போது புளோக் முழுவதுமே தண்ணீர் இல்லை என்றார் அவர். தான் நண்பர் வீட்டுக்குச் சென்று அங்கு குளித்துவிட்டு வந்ததாக வும் லியானல் சொன்னார். தண்ணீர்க் குழாய்களில் சனிக்கிழமை தண்ணீர் கொஞ்ச மாக வந்தது. வழக்கநிலை திரும்ப வில்லை என்றாரவர். மனமகிழ் மன்றத்தில் தண்ணீர் இருக்கிறது என்றாலும் அங்கு ஏராளமான வர்கள் வரிசைபிடித்து நிற்பதாக லியானல் மேலும் சொன்னார்.

பீட்டர் ரோட்டில் இருக்கும் மேஸ்பிரிங்ஸ் கண்டோமினியத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி முதல் பொதுப் பயனீட்டுக் கழகம் தண்ணீர் வழங்கியது. படம்: லாம் பெய்ஷான்