மாணவர்களுக்கு அழைப்பு

மாணவர்களுக்கு அழைப்பு

1 mins read
9c26c913-e239-4b99-9f74-9cee7e3925d7
-

ப. பாலசுப்பிரமணியம்

பல இன மக்கள் வாழும் சிங் கப்பூரில் இருமொழிக் கல்வியை முழுமையாகப் பயன்படுத்தி கற்றலையும் பொருளியல் வாய்ப் புகளையும் அணுக வேண்டும் என்று தெரிவித்தார் கல்வி அமைச்சரும் (பள்ளிகள்), இரண்டாம் போக்குவரத்து அமைச்சருமான இங் சீ மெங். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நேற்று நடந்த நல் லாசிரியர் விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் அவ்வாறு கூறினார். இவ்விருது நிகழ்ச் சியை தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியன கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. எதிர்கால சிங்கப்பூர் தலை முறையினரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பொறுப்பு தாய் மொழி ஆசிரியர்களுக்கு உள் ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், மாணவர்களை உலகளாவிய அரங்கிற்கு தயார்ப் படுத்துவதோடு ஆசிய மரபுடைமைத் தொடர்புகளை வலுவாக்கவும் அவர்கள் உதவுகின்றனர் என்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருதை கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங்கிடமிருந்து பெற்றுக் கொண்ட மூத்த ஆசிரியர்கள் அ.ராமசாமி, 84, (இடது), எஸ்.டேனியல், 79. படம்: திமத்தி டேவிட்