துடிப்பான தாளத்துடன் வேற்று இனத் தவரும்கூட உச்சரிக்கும் விதத்திலான எளிய சொற்கள், இலக்கை நோக்கி இளையர்களை முன்நோக்கிச் செல்லத் தூண்டும் 'முன்னேறு வாலிபா...' தேசியப் பாடலை எழுதிய திரு சூசை ஜேசுதாஸ், 87, இவ்வாண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற மூவரில் ஒருவர். தமிழாசிரியராக 1954ஆம் ஆண்டில் பணியைத் தொடங்கிய அவர், ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தில் பணியாற்றியபோது இப்பாடலைத் தம் மாணவர்களுக்காக 1968ஆம் ஆண்டில் எழுதினார். "தேசிய தினம், பள்ளி நிறுவனர்கள் தினம் ஆகியவற்றைக் கொண்டாட ஓர் அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சீன, மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே தேசியப் பாடல்கள் ஒலித்தன. தலைமையாசிரியரின் ஊக்குவிப்பின் பேரில் இந்தத் தமிழ்ப் பாடலை எழுதினேன்," என்றார் திரு ஜேசுதாஸ். தேசிய தினத்தைக் கொண்டாட இன்றுவரை பள்ளிகளிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் சிங்கப்பூரர்களால் ஆடிப் பாடி ரசிக்கப்படும் முக்கிய தமிழ்ப் பாடல்களில் 'முன்னேறு வாலிபா'வும் ஒன்று. தெலுக் பிளாங்கா தமிழ்மொழி நிலையத்திலும் பணியாற்றிய அவர், தமிழ்மொழியின்பால் இருந்த ஈடுபாட்டால் பல தேவாலயங்களில் வழிபாடுகளும் ஜபங்களும் தமிழில் நடைபெற முயற்சி மேற்கொண்டார்.
படவிளக்கம்:
தமிழ் முரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்கள், அவர்களது பள்ளி முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் (முன் வரிசையில் இடமிருந்து ஐந்தாவது), தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் விக்ரம் நாயர் (முன் வரிசையில் இடமிருந்து நான்காவது). படங்கள்: திமத்தி டேவிட்
வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற மூவருள் ஒருவரான சூசை ஜேசுதாஸ்
உயர்நிலைப்பள்ளி பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற முனைவர் கோவிந்தசாமி சந்தன்ராஜ், முதல் பரிசு வென்ற சாந்தலிங்கம் கல்பனா.
தொடக்கக்கல்லூரி பிரிவில் முதல் பரிசு பெற்ற செல்வி மாணிக்கம்.

