பிள்ளையின் கல்விக்கு சிங்கப்பூர் பெற்றோர் $96,000 செலவு

பிள்ளையின் கல்விக்கு சிங்கப்பூர் பெற்றோர் $96,000 செலவு

1 mins read

சிங்கப்பூர் பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகள் தொடக்கப்பள்ளி முதல் இளநிலை பட்டதாரிகளாக படித்து முடிக்கும் வரையில் கல்விக்காக US$70,939 (சுமார் S$96,000) செலவிடுகிறார்கள். உலகில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விக்குச் செலவிடும் சராசரி தொகை US$44,221 ஆக இருக்கிறது. சிங்கப்பூர் பெற்றோர்கள் செலவிடும் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு தொகையைத்தான் உலகத்தில் பெற்றோர்கள் செலவிடுகிறார்கள். இருந்தாலும் ஹங்காங்கில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் செலவிடும் தொகை சராசரியாக US$132,161 ஆக இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 15 நாடு களையும் வட்டாரங்களையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட ஆய்வில், தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி கற்க அனுப்ப ஆசைப் படும் பெற்றோர்களைப் பார்க்கையில், சிங்கப்பூர் உலகில் எட்டாவது இடத்தில் இருக்கிறது என்று தெரிகிறது.