போலிஸ் விளக்கம்

போலிஸ் விளக்கம்

1 mins read
4b86b982-7a3e-48c3-ae70-2ab44d800233
-

ரிவர் வேலி பகுதியில் பரோட்டா வாங்குவதற்காக ஒரு போலிஸ்காரர் தன் வாகனத்தைச் சட்டவிரோதமாக நிறுத்தி வைத்துவிட்டு சென்றார் என்று இணையத்தில் கூறப்பட்டது. ஆனால் அந்த போலிஸ்காரர் பொது தொந்தரவு சம்பவம் ஒன்று பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார் என்று போலிஸ் விளக்கியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சினிரோம் இலிசெப்மி என்ற ஃபேஸ்புக் பயனீட்டாளர், எண் 400 ரிவர் வேலி ரோடு முகவரியில் இருக்கும் ஸ்பைஸ் உணவகத்திற்கு அருகே ஒரு போலிஸ்காரர் வாகனத்தைச் சட்டவிரோதமாக நிறுத்தி வைத்திருந்தார் என்று கூறி, நான்கு புகைப்படங்களையும் இரண்டு காணொளிகளையும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு பதிவேற்றி இருந்தார். அதன் தொடர்பில் போலிஸ் விளக்கம் அளித்தது.

சட்ட விரோதமான இடத்தில் ஒரு போலிஸ் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் படம் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. படம்: ஃபேஸ்புக்/சினிரோம் இலிசெப்மி