வில்சன் சைலஸ்
குடும்பத்துடன் நேரம் செலவிட எண்ணிய 35 வயது திரு ரவி குமாருக்கு பொங்கோலில் நேற்று நடந்த 'மை ஃபேமிலி ஃபியஸ்டா' எனும் கொண்டாட்ட நிகழ்வு பேரு வகை தந்தது. 'ஹே பேபி' எனும் சமூக இயக்கமும் சஃப்ரா பொங்கோல் மனமகிழ் மன்றமும் ஏற்பாடு செய்த குடும்ப நிகழ்ச்சி யில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளைய பெற் றோரில் திரு ரவி குமாரும் ஒருவர். இதில், ஆறு மாதங்களிலிருந்து ஓர் ஆண்டு வரை உள்ள குழந் தைகளுக்காக நடந்த 'டைப்பர் ரேஸ்' எனும் தவழும் பந்தயப் போட்டியில் திரு ரவிகுமாரின் ஏழு மாதக் குழந்தை, மூன்று மீட்டர் தூரத்தைத் துரிதமாக தவழ்ந்து அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதம் வரை, பத்து மாதத்திலிருந்து ஓர் ஆண்டு வரை என இரு பிரிவுகளாக நடந்த குழந்தை தவழும் போட்டியில் திரு ரவி குமாரின் குழந்தை விராஜ் உட்பட மொத்தம் 500 குழந்தைகள் பங் கேற்றன. கடந்த ஆண்டு வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறை யாக சஃப்ரா பொங்கோல் மன மகிழ் மன்றம் இந்தப் போட்டிக்கு மீண்டும் ஏற்பாடு செய்தது.
சஃப்ரா பொங்கோல் தவழும் குழந்தைகள் போட்டி 2017ல் குழந்தைகள் போட்டிபோட்டுக் கொண்டு முதலில் முன்னே தவழ்ந்து சென்று வெற்றிவாகை சூட மும்முரமாக முயல்கின்றன. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

