சீமெய் வட்டாரத்தில் இருக்கும் ஒரு கடைத்தொகுதியின் கண்ணாடிக் கூரையில் சிலர் ஏறியதைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் இடம்பெற்றதையடுத்து அதன் தொடர்பில் போலிசிடம் புகார் செய்யப்பட்டு இருக்கிறது. கோ சென் பின் என்ற 23 வயது ஆடவர் ஆகஸ்ட் 16ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய அந்தக் காணொளி அகற்றப்பட்டுவிட்டது. பல இளைஞர்கள் பல்வேறு சாகசங் களை ஈஸ்ட்பாயிண்ட் மால் கடைத்தொகுதி கட்டடத்தின் கூரையில் செய்ததை அந்தக் காணொளி காட்டியது. அனைத்துத் தீவு விரைவுச்சாலையின் மேம்பாலச் சாலையின் பக்கத்தடுப்பு இரும்புத் தண்டவாளங்களின் உயரே இளைஞர்கள் ஏறி நடந்ததையும் அந்தக் கணொளி காட்டியது. இதற்கிடையே, புகார் செய்யப்பட்டு இருப்பதாகவும் புலன்விசாரணை நடந்துவருவதாகவும் போலிஸ் உறுதிப் படுத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேம்பாலச் சாலை பக்கத்தடுப்புத் தண்டவாளத்தில் நடக்கும் சாகசமும் காணொளியில் இடம்பெற்றது. படம்: ஃபேஸ்புக்/டினஸ்டர்

