இந்தியாவில் துணை நிறுவனம் அமைக்க டிபிஎஸ் குழுமத்துக்கு அனுமதி

இந்தியாவில் துணை நிறுவனம் அமைக்க டிபிஎஸ் குழுமத்துக்கு அனுமதி

1 mins read

சிங்கப்பூரின் ஆகப் பெரிய கடனளிப்பு நிறுவனமான டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் இந்தியாவில் தனக்கு முற்றிலும் சொந்தமான ஒரு துணை நிறுவனத்தின் மூலம் வங்கிச் சேவைகளை வழங்க ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் அனுமதியைப் பெற்று இருக்கிறது. டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பியுஸ் குப்தா நேற்று இதனை அறிவித்தார். இந்தியாவில் டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் இப்போது ஒரு கிளை வங்கி அந்தஸ்தில் செயல் பட்டு வருகிறது. அடுத்த ஆறு முதல் ஒன்பது மாத காலத்தில் இந்த நிறுவனம் கிளை வங்கி நிலையிலிருந்து துணை நிறுவனம் என்ற நிலைக்கு மாறும். இந்திய வங்கித் துறையில் மேலும் முதலீட்டை டிபிஎஸ் குழுமம் செய்யும் என்று தலைமை நிர்வாகி விளக்கினார்.