புளோக்கில் தொங்கி கீழ் மாடிக்கு இறங்க முயன்ற மாது கைது

புளோக்கில் தொங்கி கீழ் மாடிக்கு இறங்க முயன்ற மாது கைது

2 mins read
554872f9-c0d4-478b-9fe0-6c90d1be82be
-

செங்காங்கில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் ஒரு மாடி கீழே தொடங்கி இறங்க முயன்ற ஒரு மாதை போலிஸ் கைது செய்து இருக்கிறது. அந்த மாது கீழ் மாடியில் இருக்கும் ஓர் ஆடவரின் வீட்டுக் குள் செல்ல முயன்றதாக தெரி கிறது. வேண்டுமென்றே பீதியை கிளப்பும் செயலைச் செய்ததன் தொடர்பில் அந்த மாதை அதிகாரி கள் கைதுசெய்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் ஆங்கோர்வில் கிரசெண்டில் இருக்கும் 336=பி புளோக்கில் பிற்பகல் சுமார் 1.30 மணிக்கு நிகழ்ந்தது. புளோக்கின் மூன்றாவது மாடி கைப்பிடிச் சுவரின் விளிம்பில் அந்தப் பெண் ணைப் பார்த்த அந்தப் புளோக் குடியிருப்பாளர் ஒருவர் அதை அப்படியே காணொளியாகப் படம் பிடித்தார் என்று வான் பாவ் செய்தித்தாள் தெரிவித்தது.

திருவாட்டி யூஸ்லினா ஸுல்கிஃப்லி ஸ்மித் என்ற அந்த பக்கத்துவீட்டுக்காரர்தான் துணி காயவைத்து கொண்டிருந்தபோது புளோக்கின் நடைபாதை சுவர் விளிம்பில் அந்த மாது அமர்ந் திருந்ததைப் பார்த்ததாக கூறி னார். 2வது மாடியில் இருக்கும் ஒரு வீட்டின் சமையல் அறை சன்னலைப் பார்த்தபடி இருந்த அந்தப் பெண், புளோக்கின் 2வது மாடிக்கு இறங்கி அந்த வீட்டிற்குள் செல்வதற்கு முயன்றதாகத் தெரிகிறது என்றார் திருவாட்டி ஸ்மித். "நான் கத்தினேன். என்ன செய்கிறார் என்று கேட்டேன். அந்த மாதிடமிருந்து பதில் இல்லை. பதிலாக தன் உதட்டின் மேல் கை வைத்து சத்தம் போடாமல் இருக்கும்படி என்னை அவர் கேட்டுக்கொண்டார்," என்று திருவாட்டி ஸ்மித் கூறினார்.

ஆங்கோர்வில் கிரசெண்டில் உள்ள 336=பி புளோக்கில் மூன்றாவது மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்கு 21 வயது மாது ஒருவர் தொங்கி இறங்கியதை ஒருவர் காணொளியில் படம்பிடித்தார். படம்: ஸ்டோம்ப்