ஐஎஸ் அமைப்புக்கு எதிரான 3 மாத பணிக்கு பிறகு நாடு திரும்பிய ஆயுதப்படை

ஐஎஸ் அமைப்புக்கு எதிரான 3 மாத பணிக்கு பிறகு நாடு திரும்பிய ஆயுதப்படை

1 mins read

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைத்துலக ஒருங்கிணைப்பின் அடிப்படையில் சிங்கப்பூர் ஆயுதப்படை மூன்று மாதமாக மத்தியக் கிழக்கில் பணி யாற்றி வந்தது. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவது உட்பட 50க்கும் மேற் பட்ட பணிகளில் ஆயுதப் படை ஈடுப்பட்டது. 2015 முதல் ஆகாயத்திலேயே எரிபொருள் நிரப்பும் விமானமான KC-135R ஸ்ட்ராடோடேங்கர் மூன் றாவது முறையாக செயல்பாட்டுக்கு விடப்பட்டது. மத்திய கிழக்கு வட்டாரத்தின் நிலைத்தன்மைக்கு சிங்கப்பூர் ஆயுதப் படையின் பங்களிப்புக்காக அமெரிக்க ஆயுதப்படை ஆணை யர் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெஃப்ரி ஹேரிகியன் பாராட்டு தெரிவித்தார். இதற்கிடையில், சிங்கப்பூர் கடற்படை, அமெரிக்க கடற்படை யோடு இணைந்து குவாம் அருகே பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 'பசிஃபிக் கிரிஃப்பின்' எனும் அந்த பயிற்சி ஆகஸ்ட் 19ல் தொடங்கி இம்மாதம் 2ஆம் தேதி முடிவடைந்தது.