சிறப்பான வடிவமைப்புக்காகவும் கட்டுமானத்துக்காகவும் பொங் கோலின் 'வாட்டர்வே காஸ் கேடியா' அடுக்குமாடி கட்டடங் களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன. 1009 வீடுகளைக் கொண்ட இந்த வீடமைப்புப் பேட்டையில், சுமார் 30 விழுக்காடு வீடுகளி லிருந்து பொங்கோல் வாட்டர்வே பூங்காவை வளைவான வடிவில் காண முடியும். இன்னொரு 45 விழுக்காடு வீடுகளிலிருந்து அலங்கரிக்கப் பட்ட இயற்கைநிலக்காட்சியை காண முடியும். அந்த இடங்கள் சமூக ஒன்றுகூடலுக்காக அமைக்கப்பட்டவையாகும். இதற்காக, இந்த கட்டடங் களை வடிவமைத்த ஏடிடிபி ஆர்க் கிடெக்ட்ஸ் நிறுவனம், அங்கு உள்ள எட்டு கட்டடங்களின் உயரங்களை மாறுபட்டவையாக அமைத்துள்ளது. அவ்வாறான அமைப்பினால், நீர்வீழ்ச்சி போன்ற தோற்றத்தை உருவாக்கி யுள்ளது. வடிவமைப்புக்காக கொடுக்கப் படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழ கத்தின் ஆக உயரிய விருது 'வாட்டர்வே காஸ்கேடியா'வுக்குக் கிடைக்க இதுவும் ஒரு காரணம். தேவைக்கேற்ப கட்டப்படும் வீவக வீடுகளில் ஒன்றான இது, 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வீடு வாங்கியவர் களுக்கு சாவிகள் கொடுக்கப் பட்டது.
வீவக விருதுகளைப் பெற்ற 'நீர்வீழ்ச்சி கட்டடங்கள்'
1 mins read

