ஓம திராவகத்தால் பாதிப்பு; ஒரு தனிப்பட்ட பிரச்சினை

ஓம திராவகத்தால் பாதிப்பு; ஒரு தனிப்பட்ட பிரச்சினை

2 mins read
d3730d9c-b0cc-4573-87ad-0d8f799a37a1
-

வில்சன் சைலஸ்

ஒரு மடக்கு ஓம திராவகத்தால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்று நாட்கள் சிகிச்சை பெறுவோம் என 55 வயது திரு குணாளன் பெருமாள் (படம்) சிறிதும் எதிர் பார்க்கவில்லை. நிர்வாகியாகப் பணியாற்றி வரும் அவர், செரிமா னத்திற்காக எப்போதும் போல ஓம திராவகத்தைக் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி குடித்தபோது வாந்தி யுடன் தொண்டை எரிச்சலாலும் பாதிக்கப்பட்டார். எரிச்சலைத் தணிக்க குளிர்ந்த தண்ணீரை அருந்தியபோது சில விநாடிகளுக்குள் வாந்தி எடுத்த தாக விவரித்த திரு குணாளன், சிங்கப்பூர் பொது மருத்துவ மனைக்கு மனைவி திருமதி தருமம்பாள் மாரியப்பனுடன் உடனே விரைந்தார்.

"மூன்று நாட்களாகக் கண் விழிக்க முடிந்தாலும் என்ன நடக்கிறது என்பதை உணர முடியவில்லை," என்ற திரு குணாளனுக்கு எரிச்சலின் காரணமாக தொண்டையில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை வழங்கப்பட்டதாக மருத்துவ குறிப்பு தெரிவிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய திரு குணாளன், அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளை இப்போதும் மேற் கொள்கிறார். "வயிற்றில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்பதைச் சோதனைக் குழாய்கள் வழியாக மருத்துவர்கள் அடுத்த வாரம் பார்க்கவுள்ளனர்," என மேலும் குறிப்பிட்டார் அவர்.

லிட்டில் இந்தியாவில் வழக் கமாக ஓம திராவகம் வாங்கும் திருமதி தருமம்பாள், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி எம்பிரஸ் சாலையில் உள்ள தமது புளோக் கிற்கு அருகில் செயல்படும் பல சரக்குக் கடையில் அதை வாங்கி னார். "ஓம திராவகம் எந்த நிறுவனத் தைச் சேர்ந்தது என்பதைக் கவ னிப்பதில்லை," என்ற 55 வயது திருமதி தருமம்பாள், ஸ்ரீ அம்பிக் காஸ் நிறுவனத்தின் ஓம திரவா கத்தை அன்று வாங்கியதாகக் குறிப்பிட்டார். தாம் குடித்த ஓம திராவகம் காலாவதியாகவில்லை என்றும் திறக்கப்படாத புட்டியிலிருந்து அதை அருந்தியதாகவும் திரு குணாளன் குறிப்பிட்டார். ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்ததற்கான மருத்துவ செலவு கள் $7000 வரை வந்தது எனக் கூறிய திரு குணாளன், அதற்கான இழப்பீடு கோரி சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் போவதாக கூறினார். திரு குணாளன் அருந்திய ஓம திராவகத்தில் மட்டுமே பிரச்சினை திரு குணாளன் அருந்திய புட்டியில் இருந்த ஓம திராவ கத்தைப் பரிசோதனை செய்த சுகாதார அறிவியல் ஆணையம் அதன் 'பிஹெச்' குறியீடு வழக்கத் திற்கு மாறாக 13ஆக இருந்ததை உறுதி செய்தது. இது குளோரின் பிளீச்சின் 'பிஹெச்' குறியீடாகும். அதன் பின்னர் ஸ்ரீ அம்பிக்காஸ் நிறுவனத்தின் சின்னம் தாங்கிய ஓம திராவத்தின் விற்பனையை நிறுத்தும்படி கடை உரிமையாளரி டமும் அவற்றை இறக்குமதி செய்யும் நிறுவனத்திடமும் ஆணையம் தெரிவித்துள்ளது.

படம்: திரு குணாளன் பெருமாள்