பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் பற்றி இளையருக்குக் கற்பிக்க அழைப்பு

பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் பற்றி இளையருக்குக் கற்பிக்க அழைப்பு

1 mins read

பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் பற்றி இளையர்களுக்குக் கற்பிக்க இரண்டாம் மனிதவள அமைச்சர் ஜோசஃப்பின் டியோ அழைப்பு விடுத்துள்ளார். பணியிடங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எதிர்கொள்ள இளையர்களைத் தயார்படுத்துவதற்கான தேவை இருப்பதாக அவர் கூறினார். பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பாக நடத்தப்படும் 21வது உலக மாநாட்டின் ஒரு பகுதியாக முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துலக இளையர் மாநாட்டில் அமைச்சர் டியோ நேற்று உரையாற்றினார். பெரியோருடன் ஒப்பிடுகையில் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் தங்கள் வேலையிடங்களில் காயமடையும் சாத்தியம் 40 விழுக்காடு அதிகம் என்று அனைத்துலகத் தொழில் அமைப்பு தகவல் தெரிவித்திருப்பதாகத் திருமதி டியோ கூறினார். கடந்த ஆண்டில் 8 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறாருக்கு அடிப்படை பாதுகாப்பு, சுகாதாரம் பற்றி கற்பிக்க பணியிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் இருவழித் தொடர்பு அம்சம் கொண்ட இணையம் வழி கற்பித்தல் சாதனத்தை உருவாக்கியதாகத் திருமதி டியோ தெரிவித்தார்.