நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

1 mins read
e2f261a6-9d8f-46dd-a21f-557133e04e88
-

முஹம்மது ஃபைரோஸ்

உலகில் வாழும் தமிழர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைத்து கலந் துரையாடல்கள் மூலம் பொருளா தார வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆண்டு இறுதியில் புதிய தளம் ஏற்படுத்தப்பட உள்ளது. உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இவ்வாண்டு நவம்பர் 15 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொ ழி ல் மு னை வ ர் க ள் , வர்த்தக மற்றும் சமூகத் தலை வர்கள், நிபுணர்கள், கல்வியாளர் கள், அரசாங்க அதிகாரிகள், கொள்கை வகுப்பவர்கள் உள் ளிட்ட பலரும் ஒன்றுகூடி தொழில் மேம்பாடு, முதலீட்டு வாய்ப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்த மாநாடு வழி வகுக்கும்.

இந்த மாநாட்டுக்கு முன் னோட்டமாகக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் சிறப்புரையாற்ற சென்னையிலிருந்து வந்திருந்தார் 2017 உலகத் தமிழர் பொருளாதார மாநாடு ஒருங்கிணைப்பாளரான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத். இந்தியாவுக்கு வெளியே கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தமிழர்கள் வாழ்கின்ற நகரம் டர்பன் என்பதால் இவ்வாண்டு மாநாட்டை அங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது என்றார் தமிழ் முரசுக்குப் பேட்டியளித்த முனைவர் சம்பத்.

டர்பன் நகரில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டுக்கு முன்னோட்டமாக சிங்கப்பூரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை வழிநடத்திய (இடமிருந்து) டாக்டர் டி. சந்துரு, முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத், திரு திருநாவுக்கரசு, திரு விஜய் ஐயங்கார். படம்: திமத்தி டேவிட்