ப.பாலசுப்பிரமணியம்
'ஜாஸ்', 'ராக்' இசைகளுடன் தமிழ்க் கவிதைகள். வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, வீதி நாடகம், கதாகாலட்சேபம் என தமிழ்ப் பாரம்பரியக் கலை களின் வழியாகக் கதைகள். அறத்தைக் கருப்பொருளாகக் கொண்ட இவ்வாண்டின் சிங்கப் பூர் எழுத்தாளர் விழாவில் கவிதை களையும் கதைகளையும் இசை, நாடகம், நடனங்களாகப் படைக் கிறது தமிழ் முரசு. 'ராக்' இசை கவிதை அங்கத் தில், அறம் பேசும் சிங்கப்பூர் தமிழ்க் கவிதைகளை படைக்கின் றன 'ராகாஜாஸ்', 'பாக்ஸ்சைல்ட்' ஆகிய இசைக் குழுக்கள். சிங்கப் பூரின் மூத்த, இளம் எழுத்தா ளர்களின் கவிதைகள் இசையுடன் அரங்கேறும். எழுத்தாளர் விழாவின் தொடக்க நாளான நவம்பர் 3ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி இடம்பெறும்.
நாட்டுப்புறக் கலை வளர்க்கும் கதை மரபு என்ற அங்கத்தில் தமிழ்நாட்டின் பிரபல வில்லுப் பாட்டுக் கலைஞரான டாக்டர் பாரதி திருமுருகன், 19ஆம் நூற் றாண்டு சிங்கப்பூர் வாழ்க்கையை விவரிக்கும் குதிரைப் பந்தய லாவணியை வில்லுப்பாட்டில் வழங்குவார். புகழ்பெற்ற நாடகக் குழுவான அவாண்ட் தியேட்டர்ஸ், கலாசார பதக்கம் பெற்ற மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரானின் 'பீடம்' குறுநாவலை வீதி நாடகமாகப் படைக்கிறது. அறம் பேசும் தமிழ்க் காப்பிய மான சிலப்பதிகாரத்தை முதன் முதலாக தெருக்கூத்து வடிவில் படைக்கிறது 'பாஸ்கர்'ஸ் ஆர்ட்ஸ் அகடமி'. இந்த அங்கம் நவம்பர் 4ஆம் தேதி இரவு இடம்பெறும் நிகழ்ச்சி. தமிழ் மறையான திருக்குறள் இவ்வாண்டின் கருப்பொருளுக்கு ஆதாரமாக விளங்குகிறது என்று தெரிவித்தார் எழுத்தாளர் விழா வின் இயக்குநர் திரு யாவ் காய் சைய்.

