மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி), போதைப் புழங்கி கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கைதுசெய்துள்ளது. 2 கிலோ கஞ்சா, 466 கிராம் ஹெராயின் ஆகியவை கைப்பற்றப் பட்டன. இவற்றின் மதிப்பு $51,000 என்று சிஎன்பி கூறியது. போதைப்பொருள் கடத்தப்படு கிறது என்று சந்தேகித்த அதிகாரி கள், உட்லண்ட்ஸ் டவுன் கார்டன் கார் பேட்டையில் செவ்வாய்க் கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார்கள். அப்போது முற்பகல் சுமார் 11 மணிக்கு 29 வயதுள்ள ஒரு சிங்கப்பூரர் ஒரு காரில் வந்தார். அந்த காரை மோட்டார்சைக்கி ளோட்டி ஒருவர் நாடிச் சென்றார். மோட்டார்சைக்கிளில் வந்தவர், கார் ஓட்டுநரிடம் ஒரு பையைக் கொடுத்தார். பிறகு அந்த கார் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட் டது. கொஞ்ச தூரத்தில் காத் திருந்த வேறு ஒருவரை ஏற்றிக் கொண்டு மோட்டார்சைக்கிளோட்டி அந்த இடத்தை விட்டுச் சென்றார். ஆனால் மலேசியர்களான இந்த இரண்டு பேரையும் உடனடி யாக அதிகாரிகள் அதே இடத்தில் கைதுசெய்தனர்.
2 கிலோ கஞ்சா, 466 கிராம் ஹெராயின் பிடிபட்டது; மூவர் கைது
1 mins read
-

