டச்சுக்காரரான ஃபெட்ரிக் நிக்கோலக், 45, என்பவர் மீது நேற்று $1.5 மில்லியன் கப்பல் விற்பனை மோசடி தொடர்பில் ஏமாற்றுக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதில் டச்சுக்காரரின் உடந்தையாளர் என்று கூறப்படும் நிக்கோலிக், 36, என்ற பிரெஞ்சுக்காரர் மருத் துவமனையில் இருக்கிறார். இந்த மாது மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவிருந்தது. இவர் ஏன் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது தெரிய வில்லை. இந்த இருவரும் ஹாவ்லக் ரோட்டில் இருக்கும் ஒரு ஹோட்டலில் செவ்வாய்க் கிழமை கைது செய்யப் பட்டார்கள். இவர்களிட மிருந்து $730,000க்கும் மேற்பட்ட தொகை கைப்பற்றப் பட்டது.
$1.5மி. மோசடி: 3வது ஆடவர் மீது குற்றச்சாட்டு
1 mins read
-

