வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுத் திட்டங்களில் உற்பத்தித்திறனைப் பெருக்குவதற்காக புதுப்புது திட் டங்களை கழகம் அறிமுகப்படுத்து கிறது. வரும் 2019ல் புதிதாக விற்பனைக்கு வரும் எல்லா வீவக அடுக்குமாடி வீடுகளிலும் முன் வார்ப்பு குளியல் அறைகள் பொருத்தப்படும். தாமிரக் குழாய்கள், கல் பதிப்பு, சன்னல் சட்டங்கள், ஈரப்பத பாதிப்பு இல்லாத ஏற்பாடு ஆகிய வற்றுடன் அந்தக் குளியல் அறை கள் அப்படியே வேறு இடத்தி லிருந்து கொண்டு வந்து பொருத் தப்படும். இது ஒருபுறம் இருக்க, 2019ல் தன்னுடைய வீட்டு திட்டங்களில் 35% திட்டங்களில் இந்தக் கழகம் முன்வார்ப்பு அறைகளை, கூடங் களை முற்றிலும் செம்மைப்படுத்தி அப்படியே கொண்டு வந்து பொருத்தவிருக்கிறது. இவற்றை உருவாக்குவதில் முப்பரிமாண வடிவமைப்பு முறை பயன்படுத்தப்படும் என்று கழகம் தெரிவித்துள்ளது. குளியல் அறைகள், அறைகள், கூடங்களும் தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும். அப்படியே கொண்டு வந்து அவை பொருத்தப் படும். இதனால் கழகத்தின் கட்டு மானத் துறையின் உற்பத்தித்திறன் பெரிய அளவில் அதிகரிக்கும்.
அடுக்குமாடி வீடுகளில் பொருத்தப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள முன்வார்ப்பு குளியல் அறைகள். இவை குறிப்பிடத்தக்க அளவில் கட்டுமானத்துறையின் உற்பத்தித்திறனைப் பெருக்குபவை என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. படம்: வீவக

